பூமி என்பது அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு உகந்த ஒரு கோளாக திகழ்கிறது. இங்கு உயிரினங்கள் வாழ்வது மட்டுமல்லாமல் அனைத்து தேவையான விஷயங்களும் இருக்கின்றன. இந்த நிலையில் உயிரினங்கள் வாழ தகுந்த மற்றொரு கோளை விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்திற்கு அருகில் கண்டறிந்துள்ளனர். இது அடர்ந்த வளிமண்டலத்துடன் இருக்கும் நமது பூமியை விட 8 மடங்கு எடை கொண்டதோடு இரண்டு மடங்கு பெரியது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்கு சூப்பர் எர்த் என்றும் 55 கேன்கிரி இ என்றும் விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். இது ஒரு நட்சத்திர மண்டலத்திற்கு அருகில் மிகவும் ஆபத்தான முறையில் சுற்றுகிறது. நம்முடைய பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 24 மணி நேரமாகும். ஆனால் தற்போது கண்டறிந்துள்ள இந்த கோள் வெறும் 18 மணி நேரத்தில் தன்னுடைய சுற்றுவட்ட பாதையை நிறைவு செய்கிறது. இதன் வளிமண்டலம் கார்பன் டை ஆக்சைடு அல்லது கார்பன் மோனாக்சைடு நிறைந்ததாக இருக்கலாம் எனவும் நீராவி மற்றும் சல்பர் டை ஆக்சைடு போன்ற பிற வாயுக்களை கொண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றன.