அமெரிக்காவை சேர்ந்தவர் ரூபர்ட் முர்டோக் (93). இவர் தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற பிரபலமான செய்தி நிறுவனங்களின் உரிமையாளராக இருந்தவர். இவர் தன்னுடைய உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த வருடம் நவம்பரில் தன்னுடைய மகனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் ரூபர்ட் தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலியான எலெனா ஜூகோவா (67) என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 25 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், ரூபர்ட்டுக்கு 5-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது கடந்த 1965 ஆம் ஆண்டு பெடிர்கா புக்கர் என்பவரை ரூபருட் திருமணம் செய்து கொண்ட நிலையில் 6 குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1967ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில், அதே வருடத்தில் அனா டெவோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 32 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். அதே வருடத்தில் வெண்டி டேங்க் என்பவரை ரூபர்ட் திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு வரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெர்ரி ஹால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிந்துவிட்ட நிலையில் தற்போது 5-வது திருமணம் செய்துள்ளார். மேலும் இவர் 4 திருமணங்கள் செய்த நிலையில் முதல் மனைவி மூலம் மொத்தம் 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.
