வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 10 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான சரவணன்…. அரசியல் ரீதியாக அப்படின்னா….  இது திரு.பொன்முடி அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு. பர்சனலா எடுத்துக்கிட்டீங்கன்னா…..

மிகப்பெரிய பின்னடைவு….  25 வருடம் கழித்து ஒரு வழக்குல இது மாதிரி இருக்கிறது என்பது பின்னடைவு. திமுகவில் ஒருத்தர் இருக்கிறார் அப்படின்னா….. அது எப்படி பின்னடைவாக முடியும். 25 வருடங்களுக்கு முன்னால் நடந்ததை இப்ப எடுத்து வச்சுக்கிட்டு அதை பின்னடைவு என்று பார்த்தீர்கள் என்றால்…..

பாஜகவில் இருக்கக்கூடியவர்கள் என்னெல்லாமோ நடக்குது….  என்னலாமோ குற்றங்களை சொல்லி தண்டனை கொடுக்கிறார்கள்…..  25 வருடங்கள் தண்டனை கொடுக்கிறார்கள்…   அதை யாரும் பாஜகவுக்கு பின்னடைவு என்று பேசவில்லையே….  அவர் மேல என்னென்னவெல்லாம் குற்றசாட்டு  இருக்கிறது என தெரிவித்தார்.