தமிழகத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். ஏழை மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பும் மற்றும் ரொக்க பணமும் வழங்கப்படும். அதன்படி 2024 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்க ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.

இதை தவிர மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இடைக்கால நிவாரணமாக 2000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இப்படி வெள்ளம் நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசு தொகை என இரண்டும் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பொங்கலுக்கு ரொக்க தொகை 1,000 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனை செய்து வருகிறது .விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.