பொதுவாக சில அரிய வகை நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுவது போன்று விலங்குகளும் பாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சில அரிதான தோல் நோய்களால் நிறம் மாறும். இதற்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த அரிய வகை நோயால் மனிதர்கள் பாதிக்கப்படும் நிலையில் தற்போது நாய் ஒன்றும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது அமெரிக்காவை சேர்ந்த ஸ்மித் என்பவர் தன்னுடைய வீட்டில் செல்ல பிராணியாக ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்த நாய் விட்டிலிகோ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கருப்பாக இருந்த அந்த நாய் முற்றிலும் ஆக வெள்ளை நிறத்திற்கு மாறியுள்ளது. அதன்படி 2 வருடத்தில் கருப்பு நிறத்தில் இருந்து முற்றிலுமாக வெள்ளை நிறத்திற்கு மாறியுள்ளது. மேலும் நாயின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை அதன் உரிமையாளர் ஸ்மித் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.