இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் தேராசர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 மக்கள் வசித்து வருகிறார்கள்‌. இங்கு வசித்து வரும் ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். இதற்கான காரணத்தைப் பற்றி தற்போது பார்ப்போம்.

அதாவது இங்கு வசிப்பவர்கள் முதல் திருமணம் செய்து கொள்ளும்போது முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது என்று நினைக்கிறார்கள். இதனால்தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் இரண்டாம் திருமணம் செய்தால்தான் குழந்தை பிறக்கும் என்று நம்புவதால்தான் இரண்டு திருமணங்களை காலம் காலமாக செய்து வருகிறார்கள். அதாவது பல வருடங்களுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குழந்தை இல்லாததால் அவர் இரண்டாம் திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததால் இதையே அவர்கள் தங்களுடைய வழக்கமாக மாற்றியுள்ளனர். மேலும் ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் சற்று ஆச்சரியமாகவும் வினோதமாகவும் இருக்கிறது.