தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. இதனால்  பலரும் ஏசி மற்றும் ஏர்கூலர் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் பலர் கடைகளை நோக்கி ஏசி வாங்க செல்கிறார்கள். அப்படி செல்லும்போது ஏசியன் விலையை கேட்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ஆகிறார்கள். ஏனெனில் ஏசியின் விலை குறைந்தபட்சம் ரூ.30,000 ஆக இருப்பதால் பலரும் வாங்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

இந்நிலையில் பட்ஜெட் விலையில்‌ ரூ.20,000-க்கு‌ கீழ் கிடைக்கும் ஏசிகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி LG LWA5GW3A மாடல் ஏசி ரூ.19,999 விலையில் கிடைக்கிறது. இது 1.5 டன் கொண்ட 3 ஸ்டார் விண்டோ ஏசியாகும். அதன் பிறகு Hyundai HS4F33.GCR-CM பிராண்ட் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி 1 டன் அளவில் ரூ.19,499 விலையில் கிடைக்கிறது. இதனையடுத்து Panasonic CU-YN12WKYM பிராண்ட் 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஒரு டன் ஸ்பிளிட் ஏசியாகும். இந்த ஏசி இன்வெர்ட்டர் வசதியுடன் ரூ.19,245 விலையில் கிடைக்கிறது. மேலும் MarQ FKAC103SFAA பிராண்ட் 3 ஸ்டார் ரேட்டிங்கில் ஒரு டன் கொள்ளளவுடன் ரூ.18,888 விலையில் கிடைக்கிறது.