தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.