தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் முன்னாள் அரசு மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும், புதிதாக திருமணமானவர்கள் மற்றும் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கு புதிய ரேஷன் அட்டை, திருமணம் செய்யப்பட்ட சான்று, குடும்பத் தலைவி பெயர் உள்ள வங்கி கணக்கு, அந்த வங்கி கணக்கு ஆதார்+அந்தப் பெண்ணின் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
