அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன் என ஆவேசமடைந்த அவர், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் அரசியல் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தொண்டர்களை சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்க உழைப்பேன் எனவும் சூளுரைத்துள்ளார்.

எனக்கு குறிப்பிட்ட ஜாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்து பழகியவர் இல்லை. நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதல்வராக ஆக்கியிருக்க மாட்டேன். அதிமுகவில் தனது பிரவேசம் தொடங்கியுள்ளதால் கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது என்றார்.