புதுச்சேரியில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அனுமதி வழங்கியுள்ளது.
நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தைக் காண ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள 13 முக்கிய திரையரங்குகளிலும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளைத் திரையிட மாவட்ட நிர்வாகம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
இந்த உத்தரவின்படி, நாளை காலை 7 மணிக்கே புதுச்சேரியில் உள்ள அனைத்து 13 திரையரங்குகளிலும் ‘ஜனநாயகன்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் காலை 7 மணி காட்சியைத் திரையரங்குகளில் கண்டு மகிழ முடியும்.
புதுச்சேரி மாவட்ட நிர்வாகத்தின் இந்தத் திடீர் சிறப்பு அனுமதியால் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளை காலை 7 மணிக்கே சிறப்புக் காட்சி தொடங்கவுள்ளதை அடுத்து, புதுச்சேரியில் உள்ள திரையரங்க வளாகங்கள் தற்போதே திருவிழாக்கோலம் பூண்டுள்ளதோடு, இந்தச் செய்தி சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
