தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் நெ. மரிய வில்சன், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குத் தடாலடியாகப் பதிலளித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மரிய வில்சன் எதிர்க்கட்சிகளை நோக்கி, “இங்கு இருக்கும் நீங்கள் அனைவரும் சாதாரணமானவர்கள் அல்ல; மிகவும் மூத்த அரசியல் பிரமுகர்கள். அப்படிப்பட்ட நீங்கள் சமூக வலைதளங்களில் (Social Media) உலா வரும் அரைகுறைத் தகவல்களையும், வதந்திகளையும் அடிப்படையாகக் கொண்டு சட்டமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதே முற்றிலும் தவறான அணுகுமுறை” என்று மிகக் காரசாரமாகச் சாடினார்.

​மேலும் தொடர்ந்த அவர், “அரசாங்கத்தின் தரப்பில் இருந்து வெளிவரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் (Official Data) மற்றும் புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து நீங்கள் நியாயமான கேள்விகளை எழுப்பலாம்; அதை விடுத்து சோசியல் மீடியா தகவல்களை நம்பி கேள்வி கேட்பது உங்களது அனுபவத்திற்கு அழகல்ல” என்று டோஸ் விட்டார்.

​எதிர்க்கட்சிகளின் போக்கை விமர்சித்து அமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் பேசிய இந்த காரசாரமான விவாத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.