தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு புதிதாக இரண்டு லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய ரேஷன் அட்டை பெறும் பெண்கள் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கேட்டு விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

உரிமைத்தொகை பெற ரேஷன் அட்டையே பிரதான ஆவணம். இதனால் புதிய ரேஷன் அட்டையை பெறும் பெண்கள் சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.