தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதை விட தனியார் கல்லூரிகள் தொடங்குவதில் தான் திமுக ஆர்வத்துடன் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூட விண்ணப்பிக்கவில்லை என்ற குற்றம் சாட்டிய அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதை தவிர திமுகவினர் வேறு ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.