தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் தலா 5000 ரூபாய் பரிசு வழங்க உள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூறுகையில், மாணவர்களின் பட்டியல் தயாராக உள்ளதாகவும், ஜூன் மாதம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.