ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு இலவச அரிசி மலிவு விலையில் மளிகை பொருட்கள் இதனால் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒரு சில முறைகேடுகளும் நடந்து வருகிறது அந்த வகையில்மு,காலை உணவுத் திட்டத்திற்கு அனுப்பப்படும் சமையல் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி, ரேஷன் கடைகளில் வழங்கப்படுவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கிருஷ்ணகிரிஉள்ள ரேஷன் கடையில் அவ்வாறு வழங்கிய பொருளை வாடிக்கையாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். மேலும், பல்வேறு ரேஷன் கடைகளில் இதுபோன்று முறைகேடு நடப்பதால், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.