உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டம் மதியாய் என்ற கிராமத்தில் வசித்து வரும் சுலேமான் என்பவர் தனது இரண்டு வயது மகளை நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் இது குறித்து அக்கம் பக்கத்தினரை விசாரித்ததில் அவரின் இரண்டு குழந்தைகள் இதற்கு முன்பு காணாமல் போய் உள்ளது தெரியவந்தது.
அதன் பிறகு சுலேமானை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தன் குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசியதாக கூறியுள்ளார். வீட்டில் இரண்டு வயது பெண் குழந்தையும் அவளது சகோதரனும் சண்டை போட்டதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
