மக்களவைக்கு ஆறாவது கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஒன்றில் கூட வென்றதில்லை. இந்தியா கூட்டணி கட்சிகளான திரிணாமுல், தேசிய மாநாடு, சமாஜ்வாதி ஆகியவை கூட்டாக ஐந்து இடங்களில் வென்றன. பாஜக (40) கூட்டணி, 45 தொகுதிகளில் வென்று இருந்தன. காங்கிரஸ் கூட்டணி 28.66%, பாஜக 40 சதவீதம் வாக்குகள் பெற்றன. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணி 39, காங்கிரஸ் கூட்டணி 11, மற்ற கட்சிகள் எட்டு இடங்களில் வென்றன.