உத்திர பிரதேச மாநிலம்  ஷாஹி மலைத்தொடரின் பாக்னியா வீர்பூர்  கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் ராஜ்குமார், ஹேமலதா. இந்த தம்பதிகளுக்கு கடந்த 2024ல் திருமணம் நடந்தது. ஆனால் ராஜ்குமாரின் தம்பி அவர் அண்ணியிடம் அடிக்கடி போனில் பேசி வந்திருக்கிறார். இன்ஸ்டா ரீல்ஸும் இருவரும் இணைந்து செய்து பதிவிட்டு வந்துள்ளனர்.

இதனால் இந்த விவகாரத்தில்  கணவன் மனைவி  இடையே  அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதால்  திருமணத்திற்கு புறம்பான தொடர்பு காரணமாக அவர் கர்ப்பமாகிவிட்டதாக ராஜ்குமார் சந்தேகம் அடைந்துள்ளார். இதனையடுத்து கடந்த மே 14ம் தேதி அவரை பைக்கில் பண்ணைக்கு அழைத்து சென்று கொலை செய்தார். குற்றவாளியை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.