வங்கதேச நாட்டின் ஆளுங்கட்சி எம்எல்ஏவான அன்வருல் அசிம் அன்வர் சிகிச்சைக்காக மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவருடைய நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதியன்று இவர் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் இவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இவர் கொலை தொடர்பாக அடுத்த கட்ட தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மேற்குவங்க காவல்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை ஒருவரை கைது செய்தது. இவர் எம் பி யின் அமெரிக்க வாழ் நண்பர் அனுப்பிய கூலிப்படை ஆள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த அமெரிக்க நண்பரின் வீட்டில் தான் கொலை செய்யப்பட்ட வங்கதேசம் எம்பி தங்கி இருந்துள்ளார். அமெரிக்கன் நண்பர் கொடுத்த உத்தரவின் பேரில் வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் எம்பியை கொல்கத்தாவின் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து தீர்த்து கட்டியதாக அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்கள். அதன் பிறகு அவருடைய உடல் சதைகளை அகற்றி அடையாளத்தை அழிக்க சதைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் நிரப்பியுள்ளனர் .

எலும்புகள் அனைத்தும் வெட்டி அவற்றையும் பேக் செய்தனர். கொல்கத்தா பகுதிக்குள் வெவேறு இடங்களில்  அப்புறப்படுத்த பல்வேறு போக்குவரத்து முறைகளை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். குற்றவாளியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதும் அவரை காவல்துறையினர் காவலில் எடுத்து எம்பியின் உடல் பாகங்களை கண்டெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இந்த கொடூர கொலை ஆரம்பகட்ட விசாரணையில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அமெரிக்க குடிமகன் அவரைக் கொல்வதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளது தெரியவந்தது. இந்த கொலை சம்பவத்தால் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.