தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த சமந்தா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதற்கிடையில்  2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தனர். இந்த நிலையில் நோய் குணமாகி மீண்டும் சினிமாவிற்குள் நுழையும் சமந்தா தன்னுடைய தோழியுடன் இணைந்து தொடர்பான போட்காஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீமோதெரபி சிகிச்சை குறித்து விளக்கமாக வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் சமந்தா எப்போதும் தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக இருப்பதால் ரசிகர்களும் தெரபி சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை செய்துள்ளார் என்று கூறி  வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)