பிரபல யூடியூபர் இர்பான் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் பாலினத்தை வெளியிட்டதையடுத்து இவர் மீது புகார் பாய்ந்தது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பேசுகையில், இர்பான் ஒரு பிரபல யூடியூபர். மேலும் இவர் உதயநிதிக்கு நெருங்கியவர்.

இதன் காரணமாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் சாமானிய மக்கள் இது போன்று ஈடுபட்டிருந்தால் கைது, ஜெயில், குண்டாஸ் என்று வழக்கு மேல் வழக்கு போட்டு இருப்பார்கள் என்று விமர்சித்துள்ளார்.