தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பும் சூழலில் சில மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொள்ளிடம் ஆறு (திருச்சி), பவானி ஆறு (ஈரோடு), தாமிரபரணி ஆறு (நெல்லை), குமரி கோதை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.