தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மாவட்டம் தோறும் உள்ள குடோன்களுக்கு தலைமை ஆசிரியர்கள் நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தேவையான அளவு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.