தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் தாக்கம் இந்த வருடம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேசமயம் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஜூன் இரண்டாவது வாரம் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நாளில் பள்ளிகளை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.