சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறுவனும் சிறுமியும் தங்களுடைய கைகளில் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் இருவரும் ஒரே டியூஷனில் படித்து வந்த நிலையில் அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஏழு மாதங்களாக காதலித்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.