விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட கால காதலர் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து செய்து விட்டதாக தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என்று பிரியங்கா கூறியிருந்தார்.

சமீபத்தில் பிரியங்கா மற்றும் பிரவீன்குமார் விவாகரத்து செய்தது உண்மைதான் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பிரியங்கா தன்னுடைய அம்மாவுக்காக இரண்டாவது திருமணம் செய்ய தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.