தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை அமலா பால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு கடந்த ஆண்டு தேசாய்  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அமலா பால் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது தனது கணவருடன் அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் அமலாபால் தனது கணவருடன் அருகே அமர்ந்திருக்க, கணவருடன் பேச முயற்சிக்கிறார். அப்போது அவருடைய கணவர் அமலாபாலின் முடியை கலைத்து விடுகிறார். இதனை பலமுறை செய்ததும் அமலாபால் கோபத்தில் பளார் என்று கணவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இவர்களின் செல்லச் சண்டை குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jagat Desai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@j_desaii)