தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து விசுவாசம், ஏகன், ஆரம்பம், பில்லா ஆகிய 4 படங்களில் சேர்ந்து நடித்த நிலையில் தற்போது 5-வது முறையாக புதிய படத்தில் ஜோடி சேர்த்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.