தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை சமந்தா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் வருண் தவானுடன் இணைந்து சிட்டாடல் என்ற பாலிவுட் வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா  அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மிகவும் கிளாமரான உடையில் போட்டோ சூட் எடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.