தமிழகத்தில் கோடை காலத்தை  முன்னிட்டு வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டில் ஏசி மற்றும் ஏர் கூலர் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. இப்படி ஏசி மற்றும் ஏர் கூலரை தொடர்ந்து பயன்படுத்துவதால் அதற்கு தகுந்தார் போன்று கரண்ட் பில்லும் அதிகமாக வரும். இருப்பினும் ஏசியை திட்டமிட்டு பயன்படுத்தினால் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும். அது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பொதுவாக நீங்கள் ஒரு மாதத்தில் ஏசியை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள், அந்த ஏசியின் வகை, திறன் மற்றும் வேகத்தை பொறுத்து மின்சார கட்டணம் வருகிறது. அதன்படி 24 மணி நேரத்தில் ஏசியானது 1000 முதல் 3000 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் நிலையில் ஏசியின் டன் அளவை பொறுத்து இது மாறுபடுகிறது. அதாவது ஒரு டன் ஏசியை பயன்படுத்தும் போது 1000 வாட்ஸும், 1.5 டன் ஏசியை பயன்படுத்தும் போது 1500 வாட்ஸும் ஆகிறது. இதில் பெரும்பாலானவர்கள் 1.5 டன் ஏசியை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் ஒரு டன் ஏசி இரண்டு வகையாக மதிப்பிடப்படும் நிலையில் அதில் 5 நட்சத்திரங்கள் உள்ள ஏசியை பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரம் (1000 வாட்ஸ்) செலவாகும். ஆனால் இதில் 5 நட்சத்திரங்கள் கொண்ட 1.5 டன் ஏசியை தினசரி 8 மணி நேரம் பயன்படுத்தினால் ஒரு மாதத்திற்கு 360 யூனிட் மின்சாரம் செலவாகும். ஒரு யூனிட் மின்சாரத்தின்  விலை ரூ‌.7 ஆகும். அப்படி பார்த்தால் 360 யூனிட் மின்சாரத்திற்கு மாதம் ரூ‌.2500 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் ஏசியை அதிகமான வேகத்தில் வைத்து இயக்கினாலும் கரண்ட் பில் குறைவாக வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.