தஞ்சாவூர் மாவட்டம் மனோஜிப்பட்டி பகுதியில் திருநங்கை சஹானா என்ற பிரபாகரன் (35) வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு கும்பகோணம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளார்.

அப்போது சுந்தரமூர்த்தி என்ற நபர் தனது மனைவியுடன் திருவையாறு நோக்கி காரில் சென்று கொண்டிருந்த நிலையில் மனக்கரம்பை டாஸ்மாக் அருகே இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சஹானா மற்றும் குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.