விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நான்கு அடி நீளம் கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் சேர்ந்த ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மருதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை உயிருடன் மீட்டனர்.