தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே 11 வயது சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்சொவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மதுரை என்பவர் வசித்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தர்மதுரையை  போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.