திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் வசிப்பவர் பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முருகேசன். இவருடைய இடத்தில் சுந்தரம் மூர்த்தி என்பவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வேலையில்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி கடைக்கு ஒரு மாதம் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சுந்தரமூர்த்திக்கு தெரியாமல் பூட்டை உடைத்து கடைகளில் இருந்த 30 தையல் இயந்திரங்களை எடுத்து சென்று விற்பனை செய்திருக்கிறார் முருகேசன். இதனால் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருட்டு புகாரில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.