சென்னையில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த வாலிபர் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி ஆபாச புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். அவர் தொடர்ந்து இளம்பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை கேட்ட நிலையில் அந்த பெண் அனுப்ப மறுத்ததால் ஏற்கனவே இருக்கும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் தன் பெற்றோருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை மிரட்டியது ஆனந்தபாபு (25) என்பது தெரியவந்தது.

இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் சென்னை போரூரில் உள்ள தன்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரை ஏழுகிணறு காவல் ‌ துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுடன் பழகி அவர்களை ஆசை வார்த்தை கூறி மயக்கியுள்ளார். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படம் என்று கூறியதோடு செல்போன் மூலம் பேசாமல் இன்ஸ்டா மற்றும் whatsapp-ல் மெசேஜ் மூலம் இளம்பெண்களுடன் பழகியுள்ளார். இவருடைய செல்போனில் 10 இளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.