தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவானந்தம் மற்றும் பிரதீப் குமார். இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்களது நண்பர் பூபதி ராஜாவை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜீவானந்தம் மற்றும் பிரதீப் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பூபதி ராஜா பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.