இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் புகார்கள் மற்றும் விளம்பர தொந்தரவுகள் குறித்து வரும் அனைத்து விதமான புகார்களையும் மெட்டா நிறுவனம் தீவிரமாக விசாரித்து வருவதோடு அதன் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

அந்த வகையில் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மெட்டா நிறுவனம் தொடர்ச்சியாக அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மார்ச் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் சுமார் 7.9 மில்லியன் whatsapp அக்கவுண்டுகளை தடை செய்து மெட்டா நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று கடந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 69 மில்லியன் whatsapp அக்கவுண்டுகளுக்கு தடைவிதித்து மெட்டா நடவடிக்கை எடுத்துள்ளது.