உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹாபூர் டெஹாட் பகுதியில் உள்ள அசோக் நகரில் திருமண விழாவின்போது ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாலை மாற்றிக் கொள்ளும் போது மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மணமகள் வீட்டார் மணமகனையும் அவருடைய வீட்டாரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

பதிலுக்கு மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இறுதியில் போலீசுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் பேரில் இருதரப்பிலிருந்தும் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைக்கு பிறகு இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.