மத்திய பிரதேசம் மாநிலத்தில் சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல தாய் மறுப்பு தெரிவித்ததால் 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான பெடகாட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தன்னுடைய தாயிடம் கேட்டுள்ளார்.

ஆனால் இதற்கு தாய் மறுப்பு தெரிவித்த நிலையில் சிறுமி தொடர்ந்து வற்புறுத்தி கேட்டும் தாய் மறுத்ததால் விரக்தி அடைந்த சிறுமி நேற்று மாடிக்குச் சென்று கதவு திரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.