பாஜக மூத்த தலைவரான மற்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டிசம்பர் மாதம் 1ஆம் தேதி நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற நிதின் கட்கரி”50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்”என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதன் பின் விழாவில் பேசிய அவர் கூறியதாவது, ஒவ்வொரு நபரும் குடும்பம்,சமூகம், அரசியல் அல்லது வேறு தொழில் வாழ்க்கையில் இருந்தாலும் பல்வேறு சவால்களும் சிக்கல்களும் நிறைந்ததாகவே வாழ்க்கை அமையும். அதனை எதிர்கொள்ளும் “வாழும் கலையை” அந்த நபர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக கூறியவர் அரசியல் என்பது திருத்தியற்ற ஆன்மாக்கள் அலையும் கடலாகும்.
அரசியலில் ஒவ்வொருவரும் வாய்ப்புக்காக வருத்தப்பட்டு கொண்டே இருக்கின்றனர். உறுப்பினராக வருபவர் எம்எல்ஏ ஆக வாய்ப்பு கிடைக்க நினைக்கிறார், எம்எல்ஏ அமைச்சர் பதவி எதிர்பார்த்து வருத்தப்படுகிறார், அமைச்சரானவர் அமைச்சரவையில் நல்ல துறை வேண்டும் என தவிக்கிறார். நல்லதுறையில் அமைச்சராக இருந்தாலும் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடும் அலைகிறார்கள். முதன்மை பதவியில் உள்ளவரோ பதவி எப்போது பறிபோகும் என்ற பரிதவிப்பிலே இருக்கிறார். இவ்வாறு தெரிவித்திருந்தார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே பிரதமர் மோடியின் பதவிக்கு நிதின் கட்கரி காய் நகர்த்தி வருவதாக விமர்சித்து வந்துள்ளனர்.