மகாராஷ்டிராவில் சட்டம் கடந்த 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு முடிவுகள் 23ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தம் 288 இடங்களில், பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸின் மகாயுதி கூட்டணி 46 இடங்களில் வென்றது. முன்னதாக 6 மாதங்களுக்கு முன், நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற்றது. ஆனால் 6 மாதங்களில் எப்படி மக்கள் மாற்றி வாக்களிக்க முடியும் என்ற சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோல்வியை குறித்து பேசிய பாய் ஜக்தாப் ‘தேர்தல் ஆணையம் ஒரு நாயைப் போல செயல்படுகிறது’ என்று கூறினார்.

அதாவது நரேந்திர மோடி ஜியின் பங்களாவுக்கு வெளியே அந்த நாய் அமர்ந்திருக்கிறது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த இருந்த அனைத்து நிறுவனங்களும் தற்போது நரேந்திர மோடியின் கீழ் பொம்மை போல் செயல்படுகிறது. இவர் இவிஎம் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருக்கும்போது வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தினார். ஆனால் தற்போது ஏற்குமாறாக இருக்கிறது. காங்கிரஸ் எம்எல்சி ஜக்தாப் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.