இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரும் லைக்குக்காக வித்தியாசமான முறையில் விடியோக்களை எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிடுகின்றனர். அதேபோன்று உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக, தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மண்ணை நிரப்பினார். அதை வீடியோவாக பதிவு செய்தார். பின்னர் அந்த ஜீப்பை சாலையில் ஓட்டி சென்று ரீல்ஸ் எடுத்துள்ளார்.

அப்போது ஜீப்பின் மேல் இருந்த மண், காற்றின் காரணமாக சாலையில் விழுந்தது. இதனால் பின்னால் வந்த வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.