இன்றைய டிஜிட்டல் உலகில், சொந்தமாகத் திறமைகளை வெளிப்படுத்தித் தங்களது சொந்தக் காலில் நின்று வருமானம் ஈட்ட வேண்டும் என்று கனவு காணும் லட்சக்கணக்கான புதிய படைப்பாளர்களுக்கு யூடியூப் நிறுவனம் ஒரு பெரும் அதிர்ச்சியை வழங்கியுள்ளது. யூடியூப் சேனல்கள் மூலம் பணம் ஈட்டும் தகுதியான ‘மானிடைசேஷன்’ வரம்புகளைக் கடுமையாக்கியுள்ளதோடு, அதற்கான இலக்குகளை அப்படியே இரட்டிப்பாக்கி அதிரடி காட்டியுள்ளது.

இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ஒரு புதிய யூடியூப் சேனல் பணம் ஈட்டத் தகுதி பெற வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்களைப் (Subscribers) பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கடந்த 12 மாதங்களில் 4,000 வாட்ச் ஹவர்ஸ்களைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் அல்லது கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் ஷார்ட்ஸ் பார்வைகளை பெற்றிருக்க வேண்டும் என்ற எளிய முறையே இருந்தது.

அதாவது யூடியூப் தளத்தில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்புகளை கூகுள் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி வருமானம் பெற வீடியோக்களின் பார்வை நேரம் 4,000-ல் இருந்து 8,000 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு 90 நாட்களில் 2 கோடி பார்வைகள் பெற்றால் மட்டுமே வருமானம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி இந்த நிபந்தனைகள் அனைத்தும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இனி புதிதாகத் தொடங்கப்படும் சேனல்கள் பணம் ஈட்ட வேண்டுமெனில், கடந்த 12 மாதங்களில் வாட்ச் ஹவர்ஸ் இலக்கை இரு மடங்காக உயர்த்தி, அதாவது 8,000 தகுதியான வாட்ச் ஹவர்ஸ்களைப் பூர்த்தி செய்தாக வேண்டும். அதேபோல், ஷார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் வருமானம் ஈட்ட நினைப்பவர்கள் கடந்த 90 நாட்களில் 20 மில்லியன் தகுதியான பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், 1,000 சந்தாதாரர்கள் என்ற அடிப்படை நிபந்தனையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், வாட்ச் ஹவர்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் பார்வைகளின் இலக்குகள் இரு மடங்காகக் குட்டிக்கொண்டுள்ளது பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் இந்த திடீர் அதிரடி மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரவில்லை என்றாலும், இதற்காக ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கடுமையான தகுதி வரம்புகள் அனைத்தும் வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப்பின் இந்தத் திடீர் அறிவிப்பு, நம்பி வந்த டிஜிட்டல் உலகத்தில் தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்க நினைக்கும் இளம் கிரியேட்டர்கள் மற்றும் பகுதிநேரப் படைப்பாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும் மலைக்க வைக்கும் மலையாகவும் உருவெடுத்துள்ளது.