இன்றைய நவீன காலகட்டத்தில் தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாகப் பலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று ‘யூரிக் ஆசிட்’ உயர்வு. உடலில் யூரிக் ஆசிட் அளவு அதிகரிக்கும் போது, அது மூட்டுகளில் படிகங்களாகப்  படிந்து கடுமையான மூட்டு வலி, வீக்கம் மற்றும் ‘கவுட்’  எனும் வாத நோயை ஏற்படுத்துகிறது. இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் மிக எளிய மற்றும் இயற்கையான தீர்வு ஒன்று உள்ளது. நாம் தினமும் வீணாகக் கீழே ஊற்றும் ‘அரிசி வடிதண்ணீர்’ (கஞ்சித்தண்ணி) யூரிக் ஆசிட்டை சமநிலைப்படுத்த பெரிதும் உதவுகிறது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அரிசி வேகவைக்கும் போது கிடைக்கும் வடிதண்ணீரில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள்  நிறைந்துள்ளன. ஆயுர்வேத கொள்கைகளின்படி, அரிசி கஞ்சித்தண்ணீருக்கு உடலைக் குளிர்விக்கும் தன்மையும், வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் உண்டு. இது சிறுநீரகத்தின் செயல்பாட்டை ஊக்குவித்து, ரத்தத்தில் தேங்கியுள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டை சிறுநீர் வழியாக வெளியேற்றப் பெருமளவில் துணையாக நிற்கிறது. மேலும், மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.

இந்த அரிசி வடிதண்ணீரை முறையான வழியில் தயாரித்து அருந்துவது மிக அவசியம். பனிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைத் தவிர்த்து, கைக்குத்தல் அரிசி அல்லது சிவப்பரிசியைப் பயன்படுத்திச் சமைக்கும் போது கிடைக்கும் கஞ்சித்தண்ணீரே மருத்துவக் குணம் வாய்ந்தது. அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரை வெதுவெதுப்பான நிலைக்கு ஆறவைத்து, அதில் சிறிதளவு சீரகப் பொடி அல்லது கல் உப்பு சேர்த்து அருந்தலாம். இது செரிமானத்தை சீராக்குவதுடன், யூரிக் ஆசிட் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

இந்தக் கஞ்சித்தண்ணீரைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அல்லது மதிய உணவுக்குப் பிறகு அருந்துவது சிறந்த பலனைத் தரும். தொடர்ந்து சில வாரங்கள் இதனை அருந்தி வரும்போது யூரிக் ஆசிட் அளவுகளில் நல்ல மாற்றம் தெரியத்தொடங்கும். இருப்பினும், ஏற்கனவே தீவிர சிறுநீரக நோய் அல்லது பிற கடுமையான உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள், தங்களது ஆயுர்வேத மருத்துவரின் தகுந்த ஆலோசனையைப் பெற்ற பிறகே இதனைத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது.