வீட்டு வாசலுக்கு வந்த ஆன்லைன் டெலிவரி பார்சலைப் பெறச் சென்ற 7 வயது சிறுமியிடமிருந்து, அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ஒரு பார்சல் விநியோகத்தின் போது நடைபெற்ற இச்சம்பவம் குறித்து இணையதளங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, தாய் ஒருவர் தனது 7 வயது சிறுமியை வீட்டு வாசலுக்கு வந்துள்ள ஆன்லைன் விநியோக நபரிடமிருந்து பார்சலைப் பெற்று வருமாறு அனுப்பியுள்ளார். ஆனால், அந்தச் சிறுமி வெளியே சென்ற சில வினாடிகளிலேயே, எதிர்பாராத விதமாக அவரிடமிருந்த தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில வினாடிகளில் நடந்து முடிந்த இச்சம்பவம் சிறுமியின் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.
View this post on Instagram
இந்தச் அதிர்ச்சி சம்பவம் தொடர்பான காட்சிகள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சாதாரணமாக நடக்கும் ஒரு பார்சல் விநியோகத்தின் போது கூட இத்தகைய குற்றச் செயல்கள் நடைபெறுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. அத்துடன், சிறுமியின் பாதுகாப்புக் குறித்துப் பலரும் தங்களது அனுதாபங்களையும் கவலைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவம், அடையாளம் தெரியாத நபர்களிடம் பொதுமக்கள் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, சிறு குழந்தைகளைத் தனியாக வீட்டின் வெளியே அனுப்பிப் பார்சல்களைப் பெற வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நகைகள் அணிந்திருக்கும் வேளையில் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இந்த வீடியோ எப்போது எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகாத நிலையில் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ =யாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
