திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீரகம்பட்டியில் பாலமுருகன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல்நகரில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்த ஜெகதீசன், முருகேஸ்வரி தம்பதியினர் நிலக்கோட்டையில் ஒரு நிலத்தை விற்பதாக கூறி பாலமுருகனிடமிருந்து 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர்.

ஆனால் அந்த நிலத்தை பாலமுருகனின் பெயருக்கு எழுதி கொடுக்காமலும், பணத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுகுறித்து பாலமுருகன் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி புகார் தொடர்பாக விசாரிக்க நிலக்கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஜெகதீசன், முருகேஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.