ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம் முதல் வீதியில் விவசாயியான மோகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை மோகன் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் காராபாடி அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே திடீரென ஸ்கூட்டர் நின்றதால் மோகன் கீழே இறங்கினார். இதனையடுத்து பெட்ரோல் டேங்கை திறந்து பெட்ரோல் இருக்கிறதா என சோதனை செய்து ஸ்கூட்டரை இயக்க முயன்றார்.

அப்போது திடீரென ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் ஸ்கூட்டர் முழுவதும் தீ வேகமாக பரவியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மோகன் உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் எரிந்து நாசமான ஸ்கூட்டரை பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.