திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய ஆயக்குடியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவாரத்தில் இருக்கும் முருகன் கோவில் தலைமை அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது, மாற்றுத்திறனாளியான நான் பட்டப்படிப்பு முடித்தேன். ஆனால் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்கவில்லை.

எனவே பழனி முருகன் கோவிலில் எனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அவரிடம் கோவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு மணிகண்டன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.