சமூகவலைத்தளபக்கங்கள் மற்றும் இணையத்தில் இயங்குபவர்கள் அனைவரும் தங்களின் கணக்குகளுக்கு பாஸ்வேர்டுகளுக்கு பதில் பாஸ்கீக்களை பயன்படுத்துவதே சிறந்தது ஆகும். இதன் வாயிலாக உங்களது சமூகஊடக கணக்குகளை பாதுகாப்பாக வைக்க இயலும். கூகுள் நிறுவனம் முன்னதாகவே பாஸ்கீக்களை அறிவித்து உள்ளது. பாஸ்கீ என்பது பாஸ்வேர்ட்களுக்கான ஒரு பாதுகாப்பான மாற்று ஆகும்.
ஏனெனில் பாஸ்வேர்ட்கள் திருடப்படலாம், ஹேக் செய்யப்படலாம், ஃபிஷ் செய்யப்படலாம். அதோடு நம்மில் பலரும் மிகவும் எளிமையான மற்றும் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்ட்களையே பயன்படுத்துகிறோம். ஆகவே மக்கள் பாஸ்வேர்டுகளுக்கு பதில் பாஸ்கீகளை பயன்படுத்த வேண்டும் என கூகுள் விரும்புகிறது. கூகுள் க்ரோமில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பாஸ்கீகளை பயன்படுத்த விரும்புவோர் தங்களது க்ரோம்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யும்படி பரிந்துரைக்கப்படுகின்றனர்.